SLSathish

Best Friend

Vizhiyea Vizyhiyea
Ranjith (Eeram)
0:00/4:11

Hai Every body, 

I am sathish from Bharathidhasan University college, Perambalur.

Thanks for visit my web page.

I am surely promise about you that i will give more valuable information to everyone on my webpage.

I like god siva.

நீதி வழுவாத மனுநீதிச் சோழன் நீதி தவறிய போது மனம் கயங்கி வருந்தியதைக் கூறும் மனுமுறை கண்ட வாசகம்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ!
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ!
தானம் கொடுப்பதை தடுத்து நின்றேனோ!
தருமம் பாராது தண்டம் செய்தேனோ!
கலந்த சிநேகரைக் கலகம் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு செய்தேனோ!
மனம் ஒத்த நட்புக்கு வஞ்சம் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ!
குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்த்தேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆசை காட்டி மோசம் செய்தேனொ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ!
பசித்தோரி முகத்தைப் பாராதிருந்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனொ!
கோள் சொல்லிக் குடும்பம் கலைத்தேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுதேனோ!
கற்பழிந்தவளைக் கயந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்து கன்னியை அழித்தேனோ!
கருப்பமழித்துக் களித் திருத்தேனோ!
கற்றவர் தம்மைக் கடு கடுத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
பட்சியை கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
தவம் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வதேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷனம் செய்தேனோ!
மாதா பிதாவை வைது நின்றேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்று அறியேனே!